சென்னை நந்தனத்தில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவிற்கான ஏற்பாட்டு பணிகளை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஆய்வு செய்தார். அண்ணா, பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை கொண்டாடும் வகையில், வரும் 17-ம் தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஆய்வு செய்த டி.ஆர்.பாலுவிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னேற்பாடு பணிகளை விளக்கி கூறினார்.