தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் பகுதியில் 175 கிலோ எடையில் 15 அடி உயரத்திற்கு வெண்கலத்தில் வேல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வேல் மலேசியாவில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயிலில் நிறுவப்படவுள்ள நிலையில், அதனை மலேசியாவிற்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.