தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் சிறுமியை பைக்கில் ஏற்றி சென்று விபத்தை ஏற்படுத்தி, அவரது உயிரிழப்புக்கு காரணமான இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செங்கோட்டை காவல் நிலையம் முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த 5ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமி, சிகிச்சை பலன் இன்றி 6ஆம் தேதி உயிரிழந்தார்.