நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியில் காய்கறி கடை பூட்டை உடைத்து பணத்தை திருடிய 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்த நிலையில், திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பூட்டை உடைத்து உள்ளே புகுந்த சிறுவன் கல்லாவில் இருந்த பணத்தை எடுத்து சென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.