விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள 16 அடி ஸ்ரீ கபால காளியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடைபெற்றது. சுப்பிரமணியர் கோவிலில் இருந்து பெண்கள் 1008 பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்துக் கொண்டு, மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் கோவிலை அடைந்ததும் பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.