போக்குவரத்து ஊழியர்களின் 15வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில், அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெறவுள்ளது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி பணிமனையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், 27ஆம் தேதி தொமுச உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சார்ந்த 13 தொழிற்சங்கங்களும், 28ஆம் தேதி மீதமுள்ள 72 தொழிற்சங்கங்களும் பங்கேற்க உள்ளன. தொழிற்சங்கங்களை இரண்டாகப் பிரித்து ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். கடந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தின் போது பே மேட்ரிக்ஸ் முறையில் 5 சதவீத ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டது. இம்முறை குறைந்தபட்சம் 15 சதவீதமாவது ஊதிய உயர்வு வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுக்க உள்ளனர்.