புதுச்சேரியில் 3600 அடி நீள தேசிய கொடியுடன் ஆயிரத்து 500 மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர்.அங்கு போதை ஒழிப்புக்கான விழிப்புணர்வு உறுதிமொழி நடைபெற்றது. புதுச்சேரி அரிமா சங்கத்தின் சார்பில் சுதேசி மில் அருகிலிருந்து தொடங்கிய இந்த பேரணியை NCC,NSS மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேனர்களை ஏந்திவந்து இறுதியாக கடற்கரை சாலை காந்திசிலை முன்பாக முடித்தனர்.