திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே சுமார் ஆயிரத்து 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிற்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேலியம்பேடு ஊராட்சியில் சுமார் ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்களில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன. அவை நன்கு வளர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் விளை நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்து பயிர்களை நாசம் செய்தது. மழைநீர் வெளியேறுவதற்கான கால்வாய் ஓடையை அடைத்து வைத்திருப்பதாக குற்றம்சாட்டும் விவசாயிகள், தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.