கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே விஷ வண்டு தாக்கியதில் பாதிக்கப்பட்ட 15 பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். வி.பி.அகரம் கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், அப்பகுதியில் உள்ள ஓடையில் பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கதண்டு வண்டு அவர்களை தாக்கியது.