வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஆன்லைன் மூலம் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி வாங்கி பயன்படுத்தியதாக 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 400 மாத்திரைகள் மற்றும் 5 போதை ஊசிகள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவின் வீ-கோட்டா பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப் மற்றும் ஆன்லைனில் போதை மாத்திரைகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது.