பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் 15 பேர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை பெரம்பூரில் வைத்து ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 10 பேர் மீது ஏற்கனவே குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதனை தொடர்ந்து, மேலும் 15 பேரை குண்டர் சட்டத்தில் கீழ் சிறை அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், கைது செய்யப்பட்டுள்ள ஹரிஹரன், மலர்க்கொடி, சதீஷ்குமார், கோ.ஹரிஹரன், அஞ்சலை, சிவா, பிரதீப், முகிலன், விஜயகுமார், விக்னேஷ், அஸ்வத்தாமன் உள்ளிட்ட 15 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.