Also Watch
Read this
15 நாட்களாக எரியாத மின்விளக்குகள், உயர்கோபுர விளக்குகள்.. இருளில் விபத்துகளும், சமூக விரோத செயல்களும் அரங்கேற்றம்
அச்சத்துடன் வாகன ஓட்டிகள், பொதுமக்கள்
Updated: Sep 13, 2024 09:30 AM
காஞ்சிபுரம் மாநகரை இணைக்கும் முக்கிய சாலையான பொன்னேரிக்கரை சாலை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்விளக்குகள் எதுவும் எரியாமல் இருண்டு கிடப்பதால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்லும் சூழல் நிலவுகிறது.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து காஞ்சிபுரம் மாநகருக்குள் நுழையும் முக்கிய சாலையில், இந்திரா நகர் முதல் பொன்னேரிக்கரை சந்திப்பு வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு மின்விளக்குகளும், உயர் மின்கோபுர விளக்குகளும் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக எரியாமல் உள்ளன.
இதனால் விபத்துகள் ஏற்படுவதோடு, இருளை பயன்படுத்தி கஞ்சா, மது விற்பனை, வழிப்பறி, அடிதடி போன்ற சமூக விரோத செயல்களும் அரங்கேறி வருவதாக புகார் எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved