திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த அத்தாம்பாளையத்தில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 145 டன் மானிய விலை யூரியா மூட்டைகளை உரக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கே.பி.கே நகரை சேர்ந்த ரமேஷின் காட்டன் மில்லில் யூரியா மூட்டைகள் பதுக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு 1500 ரூபாய் என விலை நிர்ணையம் செய்து விற்பனை செய்துவந்தது தெரிய வந்தது.