ராணிப்பேட்டையில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள 144ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. பொன்னையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நீர் நிலைகள் நிரம்பி பொதுபணித்துறைக்குச் சொந்தமான 369 ஏரிகளில் 144ஏரிகள் முழுவதுமாக நிரம்பின. 35ஏரிகள் 99சதவீதமும், 51ஏரிகள் 75சதவீதமும் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.