திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருள் மற்றும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், 14 பேரை கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசாருக்கு எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் சட்டவிரோத கஞ்சா மற்றும் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.