நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்படும் நெல் மணிகளை நிரப்ப 14 லட்சம் சாக்கு பைகள் கொல்கத்தாவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 1000 ஏக்கருக்கு மேல், சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் ஜனவரி மாதம் அறுவடைக்கு தயாராகி வருகிறது. அறுவடை தொடங்குவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், மேற்குவங்கத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 14 லட்சம் காலி சாக்கு பைகள், சரக்கு ரயில் மூலம் 21 பெட்டிகளில் புதுக்கோட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 74 நெல் கொள்முதல் நிலையத்திற்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.