கோவை மாவட்டம் வால்பாறை சாலையில், சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்ளிட்ட 13 பேர் அதிஷ்டவசமாக உயர் தப்பினர். கேரளா மாநிலம் ஒத்தப்பாலம் பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் குடும்பத்தை சேர்ந்த 13 பேர் சுற்றுலா வேன் மூலம் வால்பாறைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது, 9 ஆவது கொண்டை ஊசி வளைவில் வேன் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தபடி நின்றது.