இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 13 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கட்சத்தீவு அருகே ஐந்து படகுகளில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 13 பேரை பிப்ரவரி மாதம் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில், இந்திய தூதரக அதிகாரிகள் அவசர கால கடவுச்சீட்டுகள் வழங்கி கொழும்பில் இருந்து அனுப்பி வைத்தனர்.