தூத்துக்குடி மாவட்டம் இனிகோ நகர் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஆயிரத்து 200 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், 4 பேரை கைது செய்தனர். ரோந்து பணியின்போது கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு படகில் இருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தபோது பீடி இலை பண்டல்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.