கஞ்சா விற்ற வழக்கில் குற்றவாளிக்கு 12 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மதுரவாயல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக பிரபாகரன் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்த நிலையில், 4 பேரை விடுவித்ததோடு, பிரபாகரனுக்கு மட்டும் தண்டனை விதிக்கப்பட்டது.