கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தாயுடன் கெடிலம் ஆற்றுக்கு குளிக்கச் சென்ற 11 வயது சிறுமி, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஏரிபாளையத்தைச் சேர்ந்த சைனஷ் ஸ்ரீ அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். தனது தாயுடன் கெடிலம் ஆற்றுக்கு குளிக்கச் சென்றபோது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.