நீலகிரி மலை ரயிலுக்கு 117ஆவது பிறந்தநாள் விழா பயணிகளுடன் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மலை ரயிலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகளுக்கு மலர் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கி மலை ரயில் குறித்த சிறப்புகளை சுற்றுலா பயணிகளுக்கு எடுத்துரைத்து வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.