மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீரை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். வைகை அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால் மாவட்ட ஒரு போக பாசனத்திற்கு விநாடிக்கு 1130 கன அடி தண்ணீர் ஏழு மதகுகள் வழியாக திறக்கப்பட்டது. திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். நீர்மட்டம் குறைவதை ஈடு செய்யும் விதமாக முல்லை பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வைகை அணையின் பாசன கால்வாய் வழியாக விநாடிக்கு 2000 கன அடி வரை நீர் திறக்க வாய்ப்புள்ளதால் கால்வாயில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.