ராமநாதபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 110 பவுன் நகை மற்றும் 45 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியை அடுத்த அம்மா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் மங்களூரில் உள்ள துறைமுகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், இவரது வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. இவரது மகளும், மருமகனும் வெளியில் சென்று விட்டு, திரும்பி வந்தபோது, வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 110 பவுன் நகை மற்றும் 45 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து உச்சிப்புளி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.