நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஆஞ்சநேயர் திருக்கோவிலில் விஷ்வரூப ஆஞ்சநேயருக்கு 110 கிலோ எடையுள்ள வெண்ணெய் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆஞ்சநேயரை, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.