விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் திருடுபோன 11 பைக்குகளை மீட்ட காவல்துறையினர், டூவிலர் மெக்கானிக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிவகாசி மீனாட்சி காலனியை சேர்ந்த டூவீலர் மெக்கானிக்கான மணிகண்டன் என்ற அந்த நபர், வீடு மற்றும் கடைகள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளை திருடி, குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்திருக்கிறார்.