கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகே, ஃபிரன்ட் டைவ் முறையில் 60 நிமிடங்களில் தலையால் 201 ஓடுகளை உடைத்து 5-ஆம் வகுப்பு மாணவி சாதனை படைத்தார்.எல்கேஜி முதல் கராத்தே தற்காப்பு கலை பயின்று வரும் மாணவி அக்ஷயா, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த சாதனையை நிகழ்த்தினார். இதையடுத்து, சாதனை படைத்த மாணவிக்கு, தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் தங்க மோதிரமும், சைக்கிளும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், இந்த சாதனைக்காக, சோழன் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு பதக்கமும், சான்றிதழும் வழங்கியது