திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே, அரசுப் பள்ளியில் பட்டாசு வெடித்த 10 ஆம் வகுப்பு மாணவனின் விரல் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.நெடியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு கடைசி தேர்வுக்கான சிறப்பு வகுப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாணவன் அபினேஷ், தனது பையில் மறைத்து வைத்திருந்த பட்டாசை கையில் பிடித்து வெடித்ததாக கூறப்படுகிறது.