தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 10-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். திருப்பூரில் கூலி வேலை செய்து வரும் வேலாம்பட்டியை சேர்ந்த முருகானந்தத்தின் இளையமகன் அரவிந்த், வா.கொல்லைக்காட்டில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்று விட்டு உறவினருடன் இரு சக்கர வாகனத்தில் ஊர் திரும்பினார். மந்திகோன்விடுதி அருகே சென்றபோது, பட்டுக்கோட்டை நோக்கி சென்ற லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அரவிந்த், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் உதவி செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.