புதுக்கோட்டை மாவட்டம், மாந்தாங்குடியில் 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எடுத்தடிமேட்டில் முதலாம் பராந்தகச் சோழரின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் எழுப்பப்பட்ட கற்றளிக்கோவிலின் சிற்பங்கள், கட்டுமான சிதிலங்கள், கல்வெட்டுகள் ஆகியனவற்றை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தினர் ஆய்வு செய்தனர்.