தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜையில் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மண்டல பூஜையை முன்னிட்டு, ஐயப்பனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, ஐயப்பனின் வீதி உலா நடைபெற்றது.