தமிழகத்தில் திங்களன்று அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 புள்ளி 8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மாநிலத்தில் அக்னி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கரூர் பரமத்தி, திருச்சி, வேலூர், ஈரோடு, பாளையங்கோட்டை, கடலூர், சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் உள்பட 16 இடங்களில் திங்களன்று வெயில் சதம் அடித்துள்ளது.