மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040ஆம் ஆண்டு சதய விழாவை முன்னிட்டு ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலம் நடைபெற்றது. ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திர நாளன்று கொண்டாடப்படும் விழா, ஆண்டுதோறும் இரண்டு நாட்கள் அரசு விழாவாக கொண்டாப்படுகிறது. இன்று தொடங்கிய சதய விழாவில் குதிரை பூட்டப்பட்ட ரதத்தில் ராஜராஜ சோழன், அமைச்சர்கள், வாயில் காவலர்கள் உள்ளிட்டோர் போன்று வேடமிட்ட கலைஞர்கள் ஊர்வலமாக சென்றனர். தஞ்சாவூர் அரண்மனையில் இருந்து தொடங்கிய ஊர்வலம் தஞ்சை பெரிய கோயிலில் உள்ள நந்தி மண்டபத்திற்கு வந்தடைந்தது.சதய விழாவின் ஊர்வலத்தை தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மேயர், துணை மேயர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர் கலைப் பண்பாட்டுத்துறை சார்பில், தஞ்சாவூர் அரண்மனையில் இருந்து அக்கால ராஜராஜ சோழனின் நகர் வலத்தை. இக்கால தலைமுறைக்கு நினைவுப்படுத்தும் வகையில், குதிரை பூட்டப்பட்ட ரதத்தில், ராஜ ராஜசோழன் வேடமிட்டும், அமைச்சர்கள் , வாயில் காவலர்கள் வேடமிட்டு கலைஞர்கள் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். அப்போது, கொம்பு வாத்திய முழங்க இசைக்கலைஞர்களின் வாசிப்பு ரசிக்க வைத்தது.இதையும் பாருங்கள்... ராஜராஜ சோழனின் 1040ஆவது சதய விழா,. கோலாகல கொண்டாட்டம்.. | Thanjavur | Raja Raja Cholan Sadhaya Vizha