திருவள்ளூர் மாவட்டம் கோரைகுப்பம் மீனவர்களின் சுனாமி குடியிருப்புகள், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பகுதியில் 2008-2009 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 101 வீடுகள் கட்டப்பட்ட நிலையில், அங்கிருந்து கடலுக்கு செல்ல 15 கிலோ மீட்டர் சுற்றி செல்லவேண்டும் என்பதால் மீனவர்கள் அங்கு குடியேற மறுத்தனர். திட்டமிடலின்றி கட்டப்பட்ட இந்த வீடுகள் தற்போது சமூக விரோதிகளின் புகலிடமாகவும், புதர்மண்டி விஷ ஜந்துக்களின் கூடாரமாக காட்சியளிக்கின்றன.