கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு கும்பகோணம் மாநகரில் உள்ள பாணபுரீஸ்வரசுவாமி திருக்கோவிலில் சங்காபிஷேக விழா நடைபெற்றது. 1008 வலம்புரி சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நிலையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.