ஐப்பசி முதல் ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஆயிரத்து 8 லிட்டர் பாலைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாதந்தோறும் தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் ஐப்பசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.