ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி, கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள எல்லை கருப்பராயர் கோவிலில் 10 ஆயிரத்து 8 தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, சிவபெருமான், சித்தர்கள் சிலை மற்றும் எல்லை கருப்பராயரை வணங்கி, சிறிது நேரம் சித்தர் பீடத்தில் அமர்ந்து தியானம் செய்தார். பின்னர், விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கை ஏற்றி வைக்க, தொடர்ந்து 10 ஆயிரத்து 8 பெண்கள் கார்த்திகை தீபங்களை ஏற்றி வழிபட்டனர்.