சென்னை ஆவடி அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சுமார் 1,000 கிலோ கிராம் குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர். திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவர் பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குட்காவை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து உள்ளூர் கடைகளில் விற்பனை செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.