கோவை மாவட்டம் வலையாம்பாளையத்தில் முன்னாள் ஜ.டி நிறுவன பொறியாளர் வீட்டில் 100 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். 4 மாதங்களுக்கு பிறகு குற்றவாளிகளை CCTV காட்சிகள் மற்றும் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அடையாளம் கண்ட தனிப்படை போலீசார், கோவை கீரநத்தம் பகுதியில் பதுங்கி இருப்பதை அடையாளம் கண்டனர். இதனையடுத்து அங்கு சென்று குற்றவாளிகளை போலீசார் சுற்றி வளைத்தபோது, இருவருக்கு கால்முறிவு ஏற்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளித்து ஹிம்மத்சிங், ராகுல் சோனி, யாஷ்சோனி, கமல்சிங்அலவா, முகேஷ் கியான் சிங் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.