கடலூர் மாவட்டம் புதுபிள்ளையார்குப்பம் பகுதியில் கடந்த மாதம் 25 ஆம் தேதி ராஜா என்ற டாக்டரின் வீட்டில் 100 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற 5 பேரை கைது செய்த போலீசார் 93 சவரனை மீட்டனர். ஞாயிற்றுக்கிழமை அன்று சாத்திப்பட்டு அருகே வாகன தணிக்கை மேற்கொண்ட காடாம்புலியூர் போலீசார் அவ்வழியாக வந்த இன்னோவா காரை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டபோது, அதில் இருந்தவர்கள் தப்பியோட முயற்சித்தனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில், ராஜாவின் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் என்பதும், திருடிய நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றி அதனை விற்பதற்காக கும்பகோணத்திற்கு சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது.