தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஆசிரியை வீட்டில் 100 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். புறவடை பகுதியில் ஷேர்லின்பெல்மா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக நெல்லையை சேர்ந்த சுரேஷ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.