நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே, குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த 100 கிலோ அளவுக்கு கெட்டுப்போன ஆட்டிறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், கெட்டுப்போன ஆட்டுக்கறியை பதப்படுத்தி, பெங்களூருவில் இருந்து ரயில் மூலம் நாமக்கலுக்கு கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.