ஈரோடு கவுந்தப்பாடி கிராம ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.கவுந்தப்பாடி கிராம ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் மூலம் ஏராளாமானோர் வாழ்வாதாரம் பெற்று வரும் நிலையில், கிராம ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.இதனால் 100 நாள் வேலை திட்டம் ரத்தாகும் என்பதோடு சொத்து வரி, குடிநீர் வரி உயரும் என்பதால், ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்தனர்.