தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையிலிருந்து தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5 ஆயிரத்து 259 ஏக்கர் நிலங்களில் முதல் போக பாசனத்திற்கான தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மஞ்சளாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள நீரால், தேவதானபட்டி, கெங்குவார்பட்டி, G.கல்லுபட்டி, தும்ளப்பட்டி, வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும். இந்த தண்ணீர் தொடர்ந்து150 நாட்களுக்கு திறந்து விடப்படும்.