புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் பல்வேறு இருசக்கர வாகனத் திருட்டில் தொடர்புடைய நபரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.வாகன சோதனையின் போது முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்த கண்ணனைப் பிடித்து விசாரித்த போலீசார், திருடி வந்த பைக் உட்பட பதுக்கி வைத்திருந்த நான்கு வாகனங்களை பறிமுதல் செய்தனர்.