திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த சிறுநாவலூர் பகுதியில் உள்ள பெரிய ஏரியில் 10 கிராம மக்கள் பங்கேற்ற மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு ஜிலேபி, கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு நாட்டு வகை மீன்கள் கிடைத்ததாக தெரிவித்தனர்.