நாமலாம் school படிக்கும் போது கணக்கு வாத்திய பார்த்தா தலதெறிக்க ஓடி இருப்போம்.. அதுக்கு என்ன காரணமா இருக்க போகுது.. கணக்கு போட வராம நாம வாங்குன அடி தான்.. ஆன இங்க 10 ஆயிரம் கணிதத்தை 10 நிமிடத்தில செய்து சாதனை செய்திருக்காங்க சின்னஞ்சிறு மாணவர்கள்.தஞ்சையில் 4 வயது முதல் 9 வயது வரையிலான சிறுவர்களுக்கு, பள்ளிப்பாட கணிதத்தோடு, கூடுதலாக அபாகஸ் முறை கணித கருவி மூலம் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளை அதிவேகமாகவும், துல்லியமாகவும் கற்றுக்கொள்ளும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அபாகஸ் முறை கணித கருவி மூலம் ஒரே நேரத்தில் 10 நிமிடத்தில் 10 ஆயிரம் கணக்குகளை போட்டு மாணவர்கள் "அப்துல் கலாம் உலக சாதனை” புத்தகத்தில் இடம்பிடித்து அதற்கான சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.