கோவை மாவட்டம் சூலூர் அருகே பத்து சவரன் தங்க நகையை திருடியதாக உத்திரபிரதேசத்தை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கரையான்பாளையத்தை சேர்ந்த சகுந்தலா வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளதாக புகார் அளித்திருந்தார்.