புதுச்சேரியில் நீட் தேர்வு மூலம் சேரத் தேவையில்லாத படிப்புகளுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான அரசாணை வெளியிடப்பட்டது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு கால்நடை, வேளாண்மை, தோட்டக்கலை, நர்சிங், உயிரியல் சார்ந்த துணை மருத்துவப் பட்டம் மற்றும் டிப்ளோமா படிப்புகள், மருந்தகம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்க்கைக்கு 10 சதவீத இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.