கள்ளக்குறிச்சி மாவட்டம் தகடி கிராமத்தில் விவசாயியான ஆறுமுகம் என்பவரது வீட்டில் 10 பவுன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஆயுத பூஜையை ஒட்டி வீட்டை சுத்தம் செய்தபோது தான் பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் அளித்தார்.